Astrology classes / Astrology institute in Chennai KP Astrology Software Information about KP Astrology Classes
ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
ஜோதிஷ நல்லாசிரியர் திரு.தேவராஜ்
Sri Prahaspathi Advanced KP Astrology Institute - Chennai
"Jothish Kalaanithi Master" A.Devaraj

Cell No: +91 9382339084
astrodevaraj@gmail.com
Our social media

சார ஜோதிட மென்பொருளின் (KP ASTROLOGY SOFTWARE) சிறப்பம்சங்கள்:

உயர் கணித சார ஜோதிட மென்பொருளின் (KP Astrology Software) முக்கியமான சிறப்பம்சங்கள் இங்கே உங்களுக்காக தொகுக்கபட்டுள்ளன..

1. THREE LANGUAGE
இந்த மென்பொருள் என்பது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோதிட அன்பர்கள் தங்களது வசதிக்கேற்ப விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
Tamil (Regional Language)
English (Global Language)
Hindi (our National Language)

2. UNIQUE NUMBER FOR EACH AND EVERY HOROSCOPE
இந்த மென்பொருளில் பதிவு செய்யப்படும் (கணிக்கப்படும்) ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பிரத்யேகமான எண் (Unique number) ஒன்று வழங்கப்படும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் மீண்டும் ஜோதிடர்களாகிய நம்மை தொடர்பு கொள்ளும் பொழுது அந்த குறிப்பு எண்ணை சொன்னாலே போதுமானது. அந்த ஜாதகத்தை நாம் எளிதாக மீண்டும் open செய்து விடலாம்.

3. USER FRIENDLY SEARCH ENGINE
இந்த மென்பொருளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜாதகத்தை open செய்வதற்கு அந்த ஜாதகத்தின் குறிப்பு எண் இருந்தால் போதுமானது என்று மேலே கூறி இருந்தேன். குறிப்பு எண் தவிர அந்த ஜாதகரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், அந்த ஜாதகம் கணிக்கப்பட்ட தேதி இவற்றில் எதை கொண்டும் அந்த குறிப்பிட்ட ஜாதகத்தை எவ்வித சிரமும் இல்லாமல் மிக எளிதாக open செய்து விடலாம். மேலும் குறிப்பாக ஜாதகரின் ராசி, நட்சத்திரம், லக்னம், உப நட்சத்திரம் போன்றவற்றை கொண்டும் தேடி கண்டுபிடிக்கலாம். இதை ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

4. BACKUP AND RESTORE OPTION
மென்பொருளில் கணித்த ஜாதகங்களை பேக்கப் (backup) செய்து எந்நேரமும் அதை ரிஸ்டோர் (restore) செய்து கொள்ளும் வசதி. அதாவது ஒரு சில நேரங்களில் நமது கணினி பழுதடையும் பொழுது நமது மென்பொருளும் செயலிழந்து (மறைந்து) போகும். பிறகு மீண்டும் மென்பொருளை Install செய்யும் பொழுது ஏற்கனவே கணித்த ஜாதகங்கள் அதில் இருக்காது. இந்த பிரச்சனையை சரி செய்ய BACKUP AND RESTORE வசதியை மென்பொருளில் அமைத்துள்ளோம். கடைசியாக Back up செய்த file-ஐ RESTORE செய்வதன் மூலம் மென்பொருளில் மீண்டும் கணித்த ஜாதகங்களை மிக எளிதாக வரவழைக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில அன்பர்கள் தங்களது கணினி (PC) மற்றும் மடிக்கணினி (LAPTOP) ஆகிய இரண்டிலும் மென்பொருளை பயன்படுத்துவார்கள். மேற்சொன்ன Backup மற்றும் Restore வசதிகளை கொண்டு கணினியில் பதிவிட்ட ஜாதகங்களை மடிக்கணினியிலும், மடிக்கணினியில் பதிவிட்ட ஜாதகங்களை கணினியிலும் மிக எளிதாக மாற்றிக்கொள்ள (Transfer) முடியும். மேலும் Back up file-ஐ வெறும் Data base file ஆக மட்டுமல்லாமல் MS Excel file ஆகவும் வைத்து கொள்ள முடியும்.

5. EXTRACTING HOROSCOPE IN PDF FORMAT (SOFT COPIES)
கணித்த ஜாதகத்தை சுருக்கமாக எனில் ஒரே பக்கத்திலும், விரிவாக எனில் சுமார் 107 பக்கங்கள் வரை மிக எளிதாக மல்டிகலரில் (PDF) வடிவில் A4 SIZE-ல் சேமித்து வைக்க முடியும். இதன் மூலமாக கணித்த ஜாதகத்தை Email, Whatsapp, Messenger, Google Drive போன்றவற்றின் மூலமாக உலகில் உள்ள எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் நொடியில் அனுப்பி வைக்க முடியும்.

6. TAKING HARD COPIES (PRINT) OF HOROSCOPE
கணித்த ஜாதகத்தை PDF வடிவில் பிரிண்ட் (Print) எடுக்கும் வசதி. எழுத்து, கணக்கு ஆகியவை புத பகவானின் காரகங்கள். அது போல கணிணியும், மென்பொருள் துறையும் புத பகவானின் காரகங்களே. அதனால் பஞ்சாங்கம் பார்த்து கணக்கு போட்டு தான் ஜாதகம் கணிக்க முடியும் என்றில்லை. இது போன்ற மென்பொருளை பயன்படுத்தி ஜாதகத்தை ஒரு சில வினாடிகளில் கணித்து பிரண்ட் (print) எடுத்து விடலாம்.

7. ASTROLOGER’S DETAILS WITH LOGO ON HOROSCOPE
ஜாதகத்தின் முகப்பு பக்கத்தின் மேலே ஜோதிடரின் முழு விபரங்களை சின்னத்துடன் (logo) வரவழைக்கும் வசதி. அதாவது ஜோதிடரின் பெயர், ஜோதிட மையத்தின் பெயர், அலுவலக விலாசம், ஜோதிடரின் அலைபேசி எண், ஜோதிடரின் முகநூல் ID, ஜோதிடரின் இணையதள முகவரி, போன்றவற்றை விருப்பமான COLOR, STYLE மற்றும் SIZE-ல் ஜாதகத்தின் முகப்பு பக்கத்தில் பதிவிடும் வசதி. இது வாடிக்கையாளர்கள் ஜோதிடர்களாகிய நம்மை மீண்டும் அடையாளம் காண (தொடர்பு கொள்ள) பெரும் உதவி புரியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..

8. NOTES OPTION:
வாடிக்கையாளர்களின் விபரங்களை அந்த ஜாதகத்திலேயே குறிப்புகளாக சேமித்து (save) வைத்துக் கொள்ளும் வசதி. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் அந்த ஜாதகரை பற்றியும், ஜோதிடர்களாகிய நாம் அந்த ஜாதகத்தில் பெற்ற அனுபவங்களை பற்றியும் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஜோதிட துறையில் ஆராய்ச்சி செய்யும் அன்பர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த Notes பக்கத்தை ஜாதகத்துடன் சேர்த்து பிரிண்ட் செய்ய முடியும் என்பதால் இந்த Notes பக்கத்தில் வாடிக்கையாளருக்கு நாம் கொடுக்கும் சில அறிவுரைகளை குறிப்பிடும் பொழுது அது ஜாதக நகலுடன் சேர்ந்து வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

9. HORARY PREDICTION
பிரசன்னம் பார்க்கும் வசதி:
ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஜாதகம் ஏதும் இல்லை என்று கூறி ஜோதிட ரீதியாக பலன் சொல்லுங்கள் என்று கூறுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் பிரசன்ன ஜோதிடம் என்பது இன்றியமையாதது ஆகும். இந்த பிரசன்னத்தையும் இதே மென்பொருளில் மிக எளிதாக கணிக்க முடியும்.

10. MARRIAGE MATCHING
திருமண பொருத்தம்
(i) பாரம்பரிய முறையில் பின்பற்றப்படும் லக்ன பொருத்தம், ராசி பொருத்தம், நட்சத்திர பொருத்தம் ஆகியவைகளை எவ்வித சிரமமும் இல்லாமல் துல்லியமாக அறியும் வசதி.
(ii) அது மட்டுமல்லாமல் நமது உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம் பார்க்கும் வசதி.
அதாவது திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கும் 7-ம் பாவம், களத்திர காரகன், ஜாதகத்தின் தலைமை பீடமான லக்ன பாவம், தெய்வ பாவமான 9-ம் பாவம், நடப்பு தசாநாதன், நடப்பு புத்திநாதன் ஆகியவைகளின் கொடுப்பினைகளை ஆராய்ந்து அவைகள் திருமண வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு சாதகமாக (வலிமையாக) உள்ளன என்பதை மதிப்பெண்களை கொண்டு மென்பொருளே காண்பிக்கும்.

மொத்தமாக ஒரு ஜாதகத்திற்கு 200 மதிப்பெண்கள் என தொகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஜாதகர் பெறும் மதிப்பெண்களை வைத்து அவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அந்த குறிப்பிட்ட ஜாதகரை எந்த மாதிரியான ஜாதகத்துடன் இணைக்கலாம் என்பதையும் எவ்வித குழப்பமும் இன்றி நாம் மிக எளிதாக தீர்மானிக்க முடியும். நமது மென்பொருளில் இந்த திருமண பொருத்த ரிப்போட்டையும் (Marriage Matching Report) PDF வடிவில் சேமித்து Print எடுக்க முடியும்..

11. BASIC NUMEROLOGY
அடிப்படை எண்கணிதம் பார்க்கும் வசதி. எண்கணிதம் (Numerology) என்பது சார ஜோதிடத்திற்கு சம்பந்தமில்லாததாக இருந்தாலும், இந்த மென்பொருள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பகுதி இணைக்கபட்டுள்ளது.

12. DETAILED TRANSIT PREDICTIONS
கோச்சார பலன் பார்க்கும் வசதி..
விதி, மதி, கதி சேர்ந்ததே ஜோதிடம் ஆகும். இதில் கதி என்கிற கோச்சாரம் என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறிது அளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அரங்கேறும் சம்பவங்களுக்கு கோச்சார பலன் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஒரு தனிமனிதனின் ஜாதகத்திற்கு இந்த மென்பொருளில் உள்ள Day Analysis OPTION மூலம் சுருக்கமாகவும், Transit Analysis OPTION மூலம் விரிவாகவும் கோச்சார பலன்களை நொடியில் அறிந்து கொள்ள முடியும்.

13. GRAPH CALCULATOR FOR FINANCE AND PERSONAL
(Planet & Bhava Graph in KP Astrology)
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த அளவிற்கு வலிமையாக உள்ளது என்பதை கண்டுபிடித்தாலே போதும். அந்த கிரகம் ஜாதகருக்கு என்ன செய்யும் என்பதை கணித்து விடலாம். நமது சார ஜோதிட முறையில் கிரகத்தின் வலிமை என்பது மேற்சொன்ன கிரகம் தான் நின்ற நட்சத்திர மற்றும் உபநட்சத்திர வாயிலாக தொடர்பு பெறும் பாவங்களேஆகும்.

சார ஜோதிட ஆரம்ப நிலை மாணவர்கள், சில கூட்டு பாவ தொடர்புகளின் வலிமையை நிர்ணயிப்பதில் சிரமப்பட கூடாது என எண்ணி ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த அளவிற்கு வலிமையாக உள்ளது மற்றும் அந்த கிரகம் ஜாதகருக்கு என்ன மாதிரியான பலனை தரும், என்பதை ஆரம்ப நிலை ஜோதிட அன்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மிக எளிதாக தெரியப்படுத்தும் விதமாக கிரகத்தின் வலிமையை அகவாழ்க்கை, புறவாழ்க்கை என தனித்தனியாக மதிப்பெண்களுடன் கூடிய வரைப்படத்தில் மென்பொருளே காண்பிக்குமாறு வடிவமைக்க பட்டுள்ளது.

கிரகத்தின் வலிமையை மதிப்பெண்களை கொண்டு மிக எளிதாக அறியும் வசதியை மென்பொருளில் அறிமுகம் செய்துள்ளோம் ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் எந்த அளவிற்கு மதிப்பெண்களை பெறுகின்றதோ அந்த அளவிற்கு மேற்குறிப்பிட்ட கிரகம் சாதகமாக இருந்து நன்மையை செய்யும்.

உதாரணத்திற்கு ஒரு கிரகம் 0% மதிப்பெண்களை பெற்றால் அந்த கிரகத்தால் ஜாதகருக்கு சிறிது கூட நன்மை இருக்காது. மாறாக கெடு பலன்களே ஏற்படும். அதே போல் ஒரு கிரகம் 100% மதிப்பெண்களை பெற்றால் அந்த கிரகத்தால் ஜாதகருக்கு அதீத நன்மை உண்டு. அந்த கிரகத்தின் வாயிலாக கெடு பலன்கள் ஏதும் ஏற்படாது.

அதே போல் ஒவ்வொரு பாவத்திற்கும் அகம் புறம் என தனித்தனியே கிராப் (graph) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு ஜாதகத்திற்கு கிரக மற்றும் பாவத் தொடர்புகளை பார்க்காமலேயே வெறும் இந்த Graph Indicator-ஐ மட்டும் பார்த்து மிக எளிதாக பலன் கூற முடியும்.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தில் ராகுபகவான் 8-ம் பாவத்தை தொடர்பு கொள்வதாக வைத்து கொள்ளுங்கள். அந்த ஜாதகருக்கு ராகு பகவான் அகம், புறம் என இரண்டு வகையான காரகங்களுக்கும் மிக மோசமான பலனையே தருவார். சிறிது கூட நன்மையை செய்ய மாட்டார். ஆதலால் ராகுபகவான் இந்த ஜாதகப்படி 0% மதிப்பெண்களையே பெற்று இருப்பார். Graph-ல் இந்த 0% மதிப்பெண்கள் என்பது Bar Diagram மூலம் காண்பிக்கப்பட்டிருக்கும்.

நாம் இந்த ஜாதகத்தில் பாவ தொடர்பை பார்த்தால், ராகு பகவான் 8-ம் பாவத்தை தொடர்பு பெற்று ஜாதகர் என்னும் லக்னத்தையே கெடுப்பதால் ராகு பகவானால் எந்த பிரயோஜனமும் இல்லை; பிரச்சனை தான் ஏற்படும் சொல்லலாம். அதே போல் Graph-ல் ராகு பகவான் 0% மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் ராகு பகவானால் சிறிது கூட நன்மை இல்லை; தீய பலன்கள் தான் ஏற்படும் என்று சொல்லி விட முடியும்.

ஒற்றை பாவங்கள், கூட்டு பாவங்கள் என அனைத்து வகையான பாவத் தொடர்புகளுக்கும் அகவாழ்க்கைக்கு மற்றும் புற வாழ்க்கைக்கு என தனித்தனியே அதற்கான மதிப்பெண்களை துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டு மென்பொருளில் feed செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது, பாவ தொடர்பை பார்க்காமலேயே வெறும் Graph-ஐ மட்டும் பார்த்து கிரக வலிமையை அறிந்து கொண்டு பலன்களை நாம் மிக எளிதாக கூற முடியும் என்பதே ஆகும். ஆரம்ப நிலையில் உள்ள ஜோதிடர்கள் மட்டுமல்லாது வாடிக்கையாளர்களும் இந்த வசதியை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஒரு சில கிரகங்கள் கூட்டு பாவங்களை தொடர்பு பெற்று இருக்கும். இது போன்ற சமயங்களில் மேற்சொன்ன கிரகங்களின் வலிமையை அறிவது ஆரம்ப நிலையில் உள்ள அன்பர்களுக்கு சற்று கடினமானதாக இருக்கலாம். இந்த Graph வசதி என்பது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

14. GATHI/VIGATHI CALCULATOR
சூரிய உதயாதி நாழிகையை கொண்டு பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கும் வசதி. இன்றைய சூழலில் ஒரு குழந்தை பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாக குறித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சில ஜாதகங்களில் ஜோதிடர்கள் வெறும் சூரிய உதயாதி நாழிகையை மட்டும் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த மென்பொருளில் சூரிய உதயாதி நாழிகையை வைத்து பிறந்த நேரத்தை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.

15. CLIENT HISTORY
ஒரு சில வாடிக்கையாளர்கள் ஜோதிடர்களாகிய நம்மை அடிக்கடி சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஜோதிடரை இதுவரை எத்தனை முறை சந்தித்துள்ளார், எப்பொழுது சந்தித்துள்ளார் என்பதை இந்த மென்பொருளில் HISTORYவசதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

16. TRANSIT OF LAGNA
லக்னம் ஒரு ராசியில் அல்லது நட்சத்திரத்தில் நுழையும் நேரத்தை கண்டறியும் வசதி. அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் லக்னம் என்பது ஒரு குறிப்பிட்ட ராசியில் எப்பொழுது நுழைகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். சுபமுஹுர்த்த நேரங்களை நிர்ணயிக்க இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே போல் ஒரு குறிப்பிட்ட நாளில் லக்னம் என்பது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் எப்பொழுது நுழைகிறது என்பதனையும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

17. SUBLORD, ASCENDANT, SIGN, STAR FILTER
எந்த கிரகத்தை தன் ஜாதகத்தில் லக்ன பாவ உபநட்சத்திர அதிபதியாக கொண்ட வாடிக்கையாளர்கள் ஜோதிடர்களாகிய நம்மிடம் அதிகமாக ஜாதக ஆலோசனை கேட்க வருகிறார்கள் என்பதை மிகச் சுலபமாக அறியும் வசதி. உதாரணத்திற்கு சார ஜோதிட அன்பர் ஒருவரின் மென்பொருளில் சுமார் 100 வாடிக்கையாளர்களின் ஜாதகங்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த 100 வாடிக்கையாளர்களின் ஜாதகங்களில்.. புத பகவான் அந்த 100 ஜாதகங்களில் எத்தனை வாடிக்கையாளர்களின் ஜாதகங்களில் லக்ன உபநட்சத்திர அதிபதியாக வந்துள்ளார், குரு பகவான் எத்தனை ஜாதகங்களில் லக்ன உபநட்சத்திர அதிபதியாக வந்துள்ளார், சுக்கிர பகவான் எத்தனை ஜாதகங்களில் லக்ன உபநட்சத்திர அதிபதியாக வந்துள்ளார் என.... 9 கிரகங்களுக்கும் தனித்தனியே பார்க்கலாம். உதாரணத்திற்கு.. Z என்ற ஜாதகத்தில் லக்ன பாவ உபநட்சத்திர அதிபதியாக புத பகவான் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த Z ஜாதகர் புத பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதால் புத பகவானை லக்ன பாவ உபநட்சத்திர அதிபதியாக கொண்ட ஜாதகர்களிடம் அல்லது புத பகவானை நடப்பு தசாநாதனாகவோ, புத்திநாதனாகவோ கொண்ட ஜாதகர்களை அதிகளவில் தொடர்பு கொள்வார்.. இதே போல் ராசி, நட்சத்திரம், லக்ன உபநட்சத்திர அதிபதி போன்றவற்றிர்க்கும் பார்க்க முடியும்.

18. MARRIAGE BIO-DATA
பெரும்பாலான திருமண தகவல் மையங்கள் MARRIAGE BIO-DATA என்ற ஒரு படிவத்தை பின்பற்றி வருவது நாம் அனைவரும் அறிவோம் அந்த MARRIAGE BIO-DATA படிவத்தை நமது உயர்கணித சார ஜோதிட மென்பொருளில் மிகச் சுலபமாக Prepare செய்து Print எடுக்கும் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

Marriage Bio-data ல்
ஜாதகரின் ஜாதகம்,
ஜாதகரின் பெயர்,
ஜாதகரின் வயது,
ஜாதகரின் உயரம் மற்றும் எடை
ஜாதகரின் தோற்றம்,
ஜாதகரின் தந்தை பெயர்,
ஜாதகரின் தாயார் பெயர்,
ஜாதகரின் சகோதர சகோதரி விபரங்கள்,
ஜாதகரின் படிப்பு,
ஜாதகரின் உத்தியோகம்/தொழில்
ஜாதகரின் மதம் மற்றும் இதர விபரங்கள் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

19_SENSITIVE_POINT
ஒரு குறிப்பிட்ட டிகிரியை ஆளக்கூடிய கிரகங்கள் யாவை என்பதை கண்டுபிடிக்கும் வசதி. அதாவது ஒரு குறிப்பிட்ட டிகிரியை குறிப்பிட்டால் அந்த டிகிரிக்கு சொந்தமான ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி, உபநட்சத்திர அதிபதி, உபஉபநட்சத்திர அதிபதி, உபஉபஉபநட்சத்திர அதிபதிகளை தெளிவாக காண்பிக்கும். உதாரணத்திற்கு..

170 டிகிரி 20கலை 00விகலை என குறிப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்.. 170 டிகிரி 20கலை என்பது கன்னி ராசியில், ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும் என்பதை நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆக மேற்குறிப்பிட்ட பாகையை ஆளக்கூடிய ராசி அதிபதி மற்றும் நட்சத்திர அதிபதி முறையே புதன் மற்றும் சந்திரன் என்பதை அறிவோம். மேலும் அந்த டிகிரி எந்த உபநட்சத்திரத்தில், உபஉபநட்சத்திரத்தில், உபஉபஉபநட்சத்திரத்தில் வருகிறது என்பதை மென்பொருள் நொடியில் காண்பிக்கும். அதே போல் மேற்கண்ட 5 நிலைகளின் (sign, star, sub, SS, SSS) அதிபதிகளை குறிப்பிட்டாலும், அந்த கிரகங்கள் எந்த டிகிரியிலிருந்து எந்த டிகிரி வரை ஆள்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

20_AUTO_NUMBER
Reference number, Unique number, குறிப்பு எண் எல்லாம் ஒன்று தான். இந்த AUTO NUMBER வசதி என்பது குறிப்பு எண் தொடக்கத்தை ஜோதிடரின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மென்பொருளில் எந்த ஒரு ஜாதகமும் இல்லாமல் நாம் புதிதாக ஒரு ஜாதகத்தை பதிவு செய்தோம் என்றால் அந்த ஜாதகத்தின் குறிப்பு எண் 1 என மென்பொருள் தானாகவே SET செய்து கொள்ளும். பின்னர் அடுத்து பதிவிடும் ஜாதகத்திற்கு குறிப்பு எண் 2 என தொடர்ந்து ALLOT செய்யும். அதன் பின்னர் குறிப்பு எண் 3....... 4.......... 5....... என தொடர்ச்சியாக வரும்.. { எந்த ஒரு ஜாதகத்திற்கும் நாமாக ஒரு குறிப்பு எண்ணை SET செய்ய இயலாது. இது UNIQUE NUMBER INTERLOCKING க்காக அமைக்கப்பட்டுள்ளது. காரணம் நாமாக குறிப்பு எண் SET செய்யும் பொழுது ஒரே எண்ணை இரண்டு ஜாதகங்களுக்கு கொடுக்க நேரலாம். } ஆனால் குறிப்பு எண்ணின் தொடக்கத்தை ஜோதிடர் தம் விருப்பத்திற்கு ஏற்ப AUTO NUMBER வசதியின் மூலம் மிகச் சுலபமாக அமைத்து கொள்ளலாம். AUTO NUMBER-ல் என்ன எண்ணை கொடுக்கின்றோமோ அந்த எண்ணிலிருந்து நாம் பதிவு செய்யும் ஜாதகங்களின் குறிப்பு எண் ஆரம்பமாகும். உதாரணத்திற்கு AUTO NUMBER-ல் 3000 என SET செய்தோம் என்றால் அதன் பின்னர் பதிவு செய்யப்படும் ஜாதகத்திற்கு குறிப்பு எண் 3001 என மென்பொருள் SET செய்து கொள்ளும்.. அதன் பின்னர் 3002....... 3003....... என்ற வரிசையில் தொடரும்.

21_DATE_CALCULATOR:
ஒரு குறிப்பிட்ட தினத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தினம் வரை உள்ள மொத்த நாட்களை கணக்கீடு செய்யும் வசதி. அதாவது 06/07/2016 இருந்து இன்று (06/07/2017) வரை எத்தனை நாட்கள் என்று ஒருவரிடம் கேட்டால் உடனடியாக ஒரு வருடம் கூறி விடுவார். ஆனால் 04/02/2006 இருந்து இன்று (06/07/2017) வரை எத்தனை நாட்கள் என்று அதே நபரிடம் கேட்டால் உடனே கூறுவது என்பது சற்று கடினமான விஷயம் ஆகும். சார ஜோதிட மென்பொருளில் DATE CALCULATOR வசதியின் மூலம் இது போன்றவைகளை மிகச் சுலபமாக நொடியில் அறியலாம். ஒரு சம்பவம் நடக்கும் என விதி என்கிற கொடுப்பினையில் குறிப்பிட்டு இருந்தாலும் அது எப்பொழுது நடக்கும் என தெரிவிப்பது மதி என்கிற தசாபுத்தியே ஆகும். மேற்சொன்ன தசாபுத்தியில் சில கணக்கீடு செய்வதற்கு இந்த DATE CALCULATOR வசதி பெரிதும் உதவி புரியும். அதாவது ஒரு ஜாதகருக்கு நடப்பு தசாநாதன் எத்தனை நாட்கள் தன் தசையை நடத்தி விட்டார், இன்னும் எத்தனை நாட்களை பாக்கி வைத்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக இந்த DATE CALCULATOR வசதியின் மூலம் அறியலாம்.

அதே போல ஒரு குறிப்பிட்ட தசை, புத்தி, அந்தரம் தொடங்க அல்லது முடிய இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதனையும் அறியலாம். இந்த DATE CALCULATOR வசதியில் ADD, SUBTRACT, DIFFERENCE என மூன்று OPTION உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....

22_DISPLAY_RESOLUTION..
ஜோதிடர்கள் தங்களது வசதிக்கேற்ப DISPLAY (screen) RESOLUTION-ஐ adjust செய்து கொள்ளும் வசதி. மென்பொருளில் 10-க்கும் மேற்பட்ட display resolution உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

astro devaraj english website next kp astrology class review about astro devaraj
Like and Share
whatsapp to contact kp astrology devaraj youtube advanced kp astrology devaraj

next kp astrology class

Bank Account Details:

Name: A.Devaraj
A.C. Number : 30126388859
Bank: State Bank of India
Branch : Porur, Chennai
IFSC Code: SBIN0005200

Gpay
Youtube Video Subscribe
devaraj facebook group, stellar astyrologers group facebook
சார ஜோதிட புத்தகங்கள்

KB ஜோதிட முறையில் விதியும் மதியும்

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1

astrology_books_devaraj_KB System

KB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2

astrology_books_devaraj_KB System

கொடுப்பினையும் தசாபுத்திகளும்

astrology_books_devaraj_KB System

ஜாதகமும் தொழில்அமைப்பும்

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்தியமும்

astrology_books_devaraj_KB System

மருத்துவ ஜோதிடம் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

ஜாதகத்தில் கல்வி பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

சார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1

astrology_books_devaraj_KB System

உயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2

astrology_books_devaraj_KB System

சிற்றின்ப சிகரங்கள்

astrology_books_devaraj_KB System

மரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்

astrology_books_devaraj_KB System

பத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு

astrology_books_devaraj_KB System

உயர் கணித சார ஜோதிடத்தில் லக்ன பாவம்

astrology_books_devaraj_KB System

அடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்

astrology_books_devaraj_KB System

பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்

astrology_books_devaraj_KB System

The Basic Principles of Advanced KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Applications of Advanced KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Destiny of Profession in KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System

The Destiny of Marriage in KP Stellar Astrology

astrology_books_devaraj_KB System
முக்கிய நிகழ்ச்சிகள்

astrology devaraj அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது

இந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட்டது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரையாற்றினர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ரீவித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட்டது.

இந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும், மேலும் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்


நமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ


இணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa

Copyright © 2022 astrodevaraj.com

free hits